கடந்த டிசம்பர் மாதம் பிறந்து 20 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா தோற்று உறுதி எனத் தெரிவித்து பொரளை பொது மயானத்தில் பலாத்காரமாக எரியூட்டப்பட்டது. இது அனைவரும் மனதை உலுக்கிய சம்பவம் இந்த சம்பவத்துக்கு பின்னர்தான் ஜனாசா எரிப்புக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றது.
பின்னர் குழந்தையின் பெற்றோரால் டிசம்பர் 23 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த கட்டாய தகனம் மூலம் தங்கள் பிள்ளை மற்றும் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் கொரோனா தோற்று இருந்திருப்பின் ஆதாரங்களை வைத்தியசாலை நிர்வாகம் பிள்ளையை அனுமதித்தது முதல் இறுதி வரை அனைத்து ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் மனுதாரர்கள் தரப்பில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது.
மனுவின் பிரதிவாதிகளாக அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜெயசிங்க, லேடி ரிஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர், சுகாதார சேவைகள் அமைச்சு பணிப்பாளர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தையின் பெற்றோர்களான Mohammed Fahim மற்றும் Fathima Safnas ஆகியோர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மேற்படி மனுவை நேற்று 29 – 3 -21 ஆம் தேதி ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. இந்நிலையில் குறித்த விசாரணையில் இருந்து நீதியரசர் யஷந்த கோதாகொட விலகிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை மே மாதம் 25ஆம் தேதி மேலும் ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது என உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியான்த ஜெயவர்தனே அறிவித்தார்.