பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தால் பண்டாரவளை நகரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்று இருப்பதை கண்ட ஊர் மக்கள் அதை போலீஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியது. விரைந்து செயல்பட்ட பண்டாரவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் புலனாய்வுப் பிரிவு மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் ஸ்தலத்துக்கு விரைந்த வந்து சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர்.
தளத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது வாகனம் சேதமாகி இருப்பதையும் வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதையும் உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணைகளில் மேற்படி காதல் ஜோடி ஒன்று அக்குரணை பிரதேசத்திலிருந்து சொந்தங்களின் எதிர்ப்பையும் மீறி வீட்டிற்கு தெரியாமல் தப்பி வந்த வந்ததாகவும் இவர்கள் பயணித்த வாகனத்தை பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் நிறுத்தியதாகவும் பாதுகாப்புக்காக இன்னொரு காதல் ஜோடியும் அவர்களுடன் வந்ததாகவும் திகன நகரில் வைத்து வாகனம் மற்றும் தாம் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் தெரிவித்ததை தொடர்ந்து எவ்வித சட்ட நடவடிக்கையும் இன்றி அவ்விடத்திலிருந்து செல்ல பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதித்தனர்.